“பரிவர்த்தனையின் நோக்கம் மக்களிடையே விழிப்புணர்ச்சி”

Organization: Parivarthanai Worldwide Social Welfare Organisation
Organiser: “Rain-Invoking” Kali K. Sudarson
Regd Office: No 18, Basement, 23,Ramanathan Street, T.Nagar, Chennai 600017
Chennai, Tamilnadu, India
Phone: +91 9841360340
Email: parivarthanai.org@gmail.com
Website: https://parivarthanai.org
info@parivarthanai.org
Mobile/WhatsApp +91- 9841 360 340
ஆசையே அனைத்துத் தீமைகளுக்கும் காரணமா?
“மழை வேண்டி புகழ்” காளி.K.சுதர்சன்
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் உணவு, உடை இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுடன் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். ஆனால், சிலர் தாங்கள் செய்யும் செயல்கள் பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும், பிறருடைய பொருள், செல்வம் மற்றும் உரிமைகளின் மீது ஆசை கொண்டு பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?
பேராசை, ஆசை என்பது மனித வாழ்வின் இயல்பான உணர்வு. ஆனால், அந்த ஆசை அளவு மீறி பேராசையாக மாறும்போது, அது மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. தனக்கே எல்லாமும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, பிறரின் நலனைப் பொருட்படுத்தாமல் வாழத் தூண்டுகிறது. மனிதன் தேவைக்காக அல்ல, பேராசைக்காக வாழத் தொடங்குகிறான். ஆசை என்பது விருப்பம், பேராசை என்பது தேவையை மீறிய அளவில்லா விருப்பம்.
இவ்வாறு பேராசையால் செய்யப்படும் செயல்களால் பிறருக்கு நன்மை உண்டாகுமா?
நிச்சயமாக இல்லை. மாறாக, அது பிறருக்கு துன்பத்தையும் சமூகத்தில் அமைதியின்மையையும் உருவாக்குகிறது.
எனவே, பிறருடையதை அபகரித்து வாழ்வதை விட, பிறருக்கு உதவி செய்து வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை. உதவும் மனப்பான்மை வளரும்போது, சுயநலம் குறையும், பேராசை விலகும், மனிதநேயம் மலரும். பிறரின் நலனில் மகிழ்ச்சி காணும் மனமே உண்மையான செல்வம். அத்தகைய வாழ்க்கையே மனிதனை உயர்வடையச் செய்யும்.
ஆம் அனைத்துத் தீமைகளுக்கும் ஆசையே காரணம்.!!!.…
“மழை வேண்டி புகழ்” காளி.K.சுதர்சன்
Date-Nov-2003